
Rohit Sharma surpassed MS Dhoni to have most ODI sixes in India! (Image Source: Google)
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் இருந்ததால் ஓபனர்கள் நிதானமாக விளையாட ஆரம்பித்தார்கள்.
குறிப்பாக, ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர்களில்தான் ரன்களை சேர்த்து வந்தார். இந்நிலையில், ரோஹித் 34 (38) டிக்னர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி 8 (10), இஷான் கிஷன் 5 (14) ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.