Advertisement

ஐபிஎல் 2023: அதிக சிக்சர்கள் பட்டியளில் ரோஹித்திற்கு 2ஆம் இடம்!

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

Advertisement
Rohit Sharma surpasses AB de Villiers to become Second leading Six hitter in IPL History!
Rohit Sharma surpasses AB de Villiers to become Second leading Six hitter in IPL History! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2023 • 10:47 PM

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த  தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை. இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 57ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சை எதிர்த்து விளையாடி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2023 • 10:47 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களைக் குவித்தது. 

Trending

இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி , 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்த சிக்ஸரால் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில்  வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்ஸருடன் முதல் இடத்திலும் , ரோஹித் சர்மா 234 போட்டியில் 252 சிக்சருடன் 2ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 170 போட்டிகளில் 251 சிக்சரும் அடித்து 3ஆவது இடத்திலும் உள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement