
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி கட்ட பயிற்சி இந்த தொடர் தான் ஆகும். எனவே இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இல்லாததால் ஆசிய கோப்பையில் சொதப்பிய இந்தியாவுக்கு, இந்த முறை முழு பலமும் உள்ளது. எனினும் இனி வரும் போட்டிகளில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வருவீர்களா?, இந்தியாவின் அணுகுமுறை இனி எப்படி இருக்கும் என பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அதற்கெல்லாம் ரோஹித் சர்மா தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “வரவுள்ள அடுத்த 6 போட்டிகளிலும் நாங்கள் என்னவெல்லாம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோமோ, அதனை செய்வோம். பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எந்தவித எல்லைகளும் கிடையாது. எனவே வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை பெறுவோம்.