Advertisement
Advertisement
Advertisement

தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!

எம் எஸ் தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி ரன் குவிக்கிறேன் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 02, 2023 • 12:22 PM
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தினால் இந்திய அணி ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையிலேயே தொடரை வென்றது.

இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த பொழுது பவர் பிளேவில் அதிக பந்துகளை ஜெய்ஸ்வால் எடுத்து விளையாடினார். இதன் காரணமாக ருத்ராஜ் பவர் பிளேவில் அதிக பந்துகளை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து பவர் பிளே கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உடனே ஸ்ரேயா மற்றும் சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். எனவே ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ருத்ராஜுக்கு வந்தது.

Trending


இதன் காரணமாக அவர் ரிங்கு சிங் உடன் இணைந்து பொறுமையாக ஆட்டத்தை கட்டமைக்க ஆரம்பித்தார். 28 பந்துகளில் 32 ரன்கள் என அவர் அதிரடிக்கு மாறிய தருணம், எதிர்பாரா விதமாக பந்து அதிகம் திரும்ப, அவர் ஆட்டம் இழந்தார். ஆனால் இந்த தொடர் முழுக்கவே அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் போது தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி இந்திய அணிக்காக ரன் குவிக்கிறேன் எனக் கூறி இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

இதுகுறித்து பேசிய அவர், "சிஎஸ்கேயில் இருந்து இதை நான் கற்றுக்கொண்டேன், மஹி பாய் எப்போதும் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதிலும், விளையாட்டைப் புரிந்துகொள்வதிலும், ஆட்டம் எவ்வாறு முன்னேறும் என்பதைப் புரிந்துகொள்வதிலும் ஆர்வமாக இருப்பார். அணியின் ஸ்கோர் உயர்த்த, குறிப்பிட்ட ஓவரில் அணிக்கு என்ன தேவை என்பதை எப்படி பார்க்க வேண்டும் என்று அவர் செய்தி அனுப்புவார்.

மஹி பாய் எப்பொழுதும் எண்ணங்களை அவசரப்படுத்த முயற்சிக்காதீர்கள் என்பார். ஏனெனில், டி20 கிரிக்கெட்டில், நீங்கள் அதிக பதற்றத்தில் இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு போதுமான நேரம் உள்ளது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக, நான் எதிர்கொள்ள 50 பந்துகள் உள்ளன, நீங்கள் 50 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தால் அது அணிக்கு போதுமானது. நான் சிஎஸ்கேவுடன் விளையாடிய காலத்திலிருந்தே அந்த விளையாட்டுத் திட்டம் என்னுடன் ஒட்டிக்கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement