
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரினை கைப்பற்றிய வேளையில் கடைசி போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் இந்திய அணியின் வீரர்கள் களமிறங்க காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரினை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் இன்றைய கடைசி போட்டியில் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதனால் அணியில் சில மாற்றங்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்றைய போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான என்பதனால் இன்றைய போட்டியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக தொடக்க வீரராக களமிறங்க இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய கடைசி போட்டியில் அவர் 19 ரன்களை அடித்தால் விராட் கோலி அந்த சாதனையை உடைத்து புதிய சாதனையை பதிவு செய்வார்.