
தென் ஆப்பிரிக்கவின் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீச முடிவுசெய்துள்ளது. இன்றைய போட்டிக்கான எம் ஐ அணிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காகிசோ ரபாடா இன்றைய போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான்மேன் மலான் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் இணை களமிறங்கியது. இதில் ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்களிலும், மாலன் 16 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 8 ரன்களிலும், கைல் வெர்ரெய்ன் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.