
SA vs ENG, 2nd ODI: Jos Buttler leads from the front with a brilliant 94* as England post a big tota (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், டேவிட் மாலன், பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.