Advertisement

விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்!

இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். 

Advertisement
விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்!
விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 26, 2023 • 11:51 AM

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. இத்தொடரில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 26, 2023 • 11:51 AM

குறிப்பாக பேட்டிங் துறையில் 2023 உலகக் கோப்பையில் பெரிய ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இத்தொடரிலும் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “அவர் மிகவும் கடுமையான போட்டியை கொடுக்கக்கூடிய வெறித்தனமான போட்டியாளர். நாங்கள் அதிகப்படியான நுணுக்கங்கள் தெரிந்த வீரர்கள் கிடையாது என்றாலும் அவரைப் போன்ற வீரர்களுக்கு எதிராக போட்டியிடும் வழியை கண்டறிவோம். குறிப்பாக எங்களுக்கு எதிராக விளையாடும் வீரர்களை விட வெற்றிக்காக அதிகமாக போராடும் பசியை நாங்கள் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட தென் ஆப்பிரிக்க மண்ணில் விராட் கோலி தான் 7 டெஸ்ட் போட்டிகளில் 719 ரன்களை 51.35 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார். அந்த வகையில் இத்தொடரிலும் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று எதிரணி வீரர்களும் கருதுகின்றனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement