
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிவடைந்தது. இதன்பின் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இதனிடையே ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவில் இறங்கியுள்ள நிலையில், ராகுல் டிராவிட் அவர்களுடன் இணையவுள்ளார். இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு என்சிஏவில் பணியில் உள்ள சிதன்ஷு கோடக் பயிற்சி கொடுக்கவுள்ளார்.
அவருக்கு உறுதுணையாக அஜய் ரத்ரா ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், ரஜீப் தத்தா பவுலிங் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார். முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கினாலும், அடுத்த 2 போட்டிகள் டிசம்பர் 19 மற்றும் டிசம்ப்ர 21 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதனால் டெஸ்ட் தொடருக்கான அணியுடன் இணைந்து பணியாற்ற ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு முன்னதாக சென்சுரியனில் முகாமிட்டுள்ளது.