Advertisement

SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement
SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 06, 2025 • 09:16 PM

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 06, 2025 • 09:16 PM

இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் விளையாடாத நிலையில் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தொடக்க வீரராக களமிறங்கினார்.

Trending

அனால் முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் அரைசதம் கடந்ததுடன் 58 ரன்களையும், முகமது ரிஸ்வான் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், குவேனா மபாகா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் பாகிஸ்தான் அணி பாலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன்ர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களைக் சேர்த்திருந்தது. இதையடுத்து 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ராம் ஷஷாத் 8 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் குர்ராம் ஷஷாத் 18 ரன்களுக்கும், காம்ரன் குலாம் 28 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, சதமடித்து விளையாடி வந்த ஷான் மசூத் 145 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் முகமது ரிஸ்வான் 41 ரன்களையும், சல்மான் ஆகா 48 ரன்களையும், அமர் ஜமால் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 58 ரன்கள் என்ற இலக்கை மட்டுமே பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது. 

Also Read: Funding To Save Test Cricket

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டேவிட் பெட்டிங்ஹாம் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய பெட்டிங்ஹாம் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement