
Pakistan vs South Africa ODI Dream11 Prediction: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நாளை (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SA vs PAK ODI Tri-Series: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
- இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
- நேரம் - பிப்ரவரி 12, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)