பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.
இதில் நடந்து முடிந்துள்ள முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது.
Trending
இத்தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்களான ஆல்ரவுண்டர் கார்பின் போஷ், வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபாகா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கார்பின் போஷ் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் குவேனா மபாகா சமீபத்தில் தென் ஆப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் அறிமுகமான நிலையில் தற்போது டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு பெற்றுள்ளார். மேற்கொண்டு இலங்கை தொடரில் கயமடைந்த வியான் முல்டர் தற்போது கயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் அவரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் பட்சத்தில் மேத்யூ பிரீட்ஸ்கி அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன்.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், பாபர் ஆசாம், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், குர்ரம் ஷஸாத், மிர் ஹம்சா, அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நௌமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா
Win Big, Make Your Cricket Tales Now