-mdl.jpg)
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ஜொஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்றிஸுடன் இணைந்த டூ ப்ளூய் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இதில் 16 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களை எடுத்த நிலையில் டூ ப்ளூய் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மகான்யாவும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.