வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்த சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் தனது நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து நலம் விசாரித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீர்ர் வினோத் காம்ப்ளி. மேலும் இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு அறிமுமகான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின், அணியின் கேப்டனுடன் மோதல், காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள், மோசமான ஃபார்ம் என தன்னுடைய கெரியரை முழுவதுமாக இழந்தார் வினோத் காம்ப்ளி. பிறகு, மோசமான நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி சிக்கியதாகவும், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் சாமீபத்தி சில செய்திகள் வெளியாகின. இதுதவிர்த்து சமீபத்தில் கூட அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின.
Trending
இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் தனது நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து நலம் விசாரித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த மறைந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார்.
VIDEO | Indian cricketing legend Sachin Tendulkar (@sachin_rt) met his childhood friend and former Indian cricketer Vinod Kambli at the unveiling ceremony of memorial for legendary cricket coach Ramakant Achrekar in Mumbai. pic.twitter.com/uTgW0MIfax
— Press Trust of India (@PTI_News) December 3, 2024
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடத்தை சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்தார். முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தனது நெருங்கிய நண்பருமான வினோத் காம்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து பேசினார். தற்போது இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதவிர பராஸ் மாம்ப்ரே, பிரவீன் ஆம்ரே, பல்விந்தர் சிங் சந்து, சஞ்சய் பங்கர் மற்றும் சமீர் திகே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Win Big, Make Your Cricket Tales Now