
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோதிய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர்களை குறைந்த ஸ்கோர்க்கு சுருட்டியது. எல்லா பந்துவீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றி இருந்தார்கள்.
அதே சமயத்தில் 200 ரண்களை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் விழுந்து நெருக்கடிக்கு உள்ளானது. அந்த போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்து, முதல் வெற்றியை தந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்ட டெல்லி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நல்ல அடித்தளத்தை அமைத்தும் கூட அவர்களை 272 ரன்களுக்கு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசினார்.