
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின்னர் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த கேஎல் ராகுல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.