
தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய அணி அறிவிப்பில், மிகவும் ஆச்சரியப்படத்தக்க ஒரு சேர்ப்பு தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன். கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இவருக்கு தமிழக அணியில் இடம் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் கிடைத்தது.
இதற்கு அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மிரட்டி விட்டார். மேலும் தமிழக அணிக்காகவும், துலிப் கோப்பை மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை இந்திய அணி என அவரது செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக லிஸ்ட் ஏ போட்டிகளில் மிக சிறப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜெயஸ்வாலுக்கு தரப்படாத வாய்ப்பு சாய் சுதர்சனுக்கு தரப்பட்டு இருக்கிறது.