-mdl.jpg)
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை அடுத்து, பாகிஸ்தான் தேர்வுகுழுவினர் மூன்று வடிவிலான அணிகளின் கேப்டனாகவும் சல்மான் ஆகாவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
பாகிஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரற்ற தன்மை நிலவி வருகிறது. அணியின் பயிற்சியாளரை மற்றுதல், அணியின் கேப்டன்களை மாற்றுதல், அணியின் தேர்வுகுழுவினரை மற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த ஐசிசி தொடரிகளில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.
இதையடுத்து எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் டி20 அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணைக்கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி போன்ற் முன்னாள் கேப்டன்கள் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.