Advertisement

 ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது - சல்மான் பட்!

ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Salman Butt slams Australia for their stand on Steve Smith's captaincy!
Salman Butt slams Australia for their stand on Steve Smith's captaincy! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 04, 2023 • 10:34 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஒரு ஆண்டாக அமைந்தது. அப்பொழுது ஸ்மித் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென்ஆப்பிரிக்கா நாட்டுக்குச் சென்ற ஆஸ்திரேலியா அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 04, 2023 • 10:34 PM

இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்மித், தொடக்க வீர்ர் பான்கிராஃப்ட், மற்றும் டேவிட் வார்னர் மூன்று பேரும் குற்றவாளிகள் என முடிவானது. இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டை ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இங்கிலாந்தில் நடந்த ஆசஸ் தொடருக்கு திரும்பி வந்த ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் வீரர்களாக மட்டுமே தொடர அனுமதிக்கப்பட்டனர். 

Trending

அவர்களுக்கு மேலும் தண்டனையாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு இருந்தது. பின்பு அப்படி கேப்டன் பதவி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று வெளியில் இருந்து கருத்துகள் வந்தன. ஆனாலும் கூட ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு டிம் பெயின் கேப்டன் பதவியில் இருந்து விலக பாட் கம்மின்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.

 ஆனால் ஸ்மித் வார்னர் பெயர் பரிசளிக்கப்படவில்லை. இதேபோல் வெள்ளை பந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஆரோன் ஃபின்ச் விலக மீண்டும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் விளையாட முடியாமல் பாட் கம்மின்ஸ் நாடு திரும்ப, ஸ்மித் கேப்டனாக செயலாற்றியதோடு ஆட்டத்தையும் வென்றார். 

இதனால் இவர் திரும்பவும் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வரவேண்டும் என்று வெளியில் இருந்து நிறைய குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடது கை ஆட்டக்காரர் சல்மான் பட், “பேட் கம்மின்ஸ் மோசமான கேப்டன் கிடையாது. ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனையை அனுபவித்த பின்னரும் ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது. 

கேப்டன் பதவியில் அவருக்கு உரிமை இல்லை என்றால், அவர் அணிக்கு தரும் ஆலோசனைகள் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுகிறது? அவர் எப்படி துணை கேப்டனாக மட்டும் இருக்க முடிகிறது? உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் விஷயங்களை கையாள முடியாது இது பாசாங்குத்தனம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement