
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணிக்கும் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இனை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டேவிட் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் சிட்னி தண்டர் அணி 5.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்தையும், சிட்னி தண்டர் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துள்ளார். மேற்கொண்டு நடப்பு பிக் பேஷ் லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.