
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருபவர் விராட்கோலி. சமீப காலமாகவே தனது பேட்டிங்கில் ஏற்பட்ட சிறிய தொய்வு காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் விளையாடி வந்த விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து ஓய்வு எடுக்க விருப்பம் தெரிவித்து அணியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நேரத்தில் பல புதிய வீரர்களை கொண்ட இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு மாற்று வீரராக எந்த பேட்ஸ்மேன் சரியாக இருப்பார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.