
ENG vs IND Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டுக்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜூலை 10) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருப்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளான. மேலும் இப்போட்டிகான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜோஷ் டங்கிற்கு பதிலாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அணி தேர்வு குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணிகளின் பிளேயிங் லெவனையும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணித்துள்ளார்.