
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 தொடருக்கு ஒரு அணியும், ரோஹித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஒரு அணியும் பிரிக்கப்பட்டிருந்தன.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தான். கடைசியாக கடந்த நியூசிலாந்துடனான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற சாம்சன், அதன்பின் வங்கதேச தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போதும் இலங்கையுடனான டி20 தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதால், இனி சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்புகள் இருக்கும் எனத்தெரிகிறது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர் குமார் சங்ககாரா முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இதனால் சஞ்சு குறித்து பேசிய சங்ககாரா, "சஞ்சு சாம்சன் தனது பணி என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதுகுறித்து நன்கு தெளிவு பெற்ற பின்னர் தான் எப்படிபட்ட அனுகுமுறையை வெளிப்படுத்தப்போகிறோம் என முடிவு செய்ய வேண்டும்.