IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ச்ஞ்சு சாம்சன் ஐந்து சிக்ஸர்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப் பிடிப்பார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இரண்டு சதங்களை விளாசிய சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். இதனால் இத்தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
தோனியை முந்தும் வாய்ப்பு
சஞ்சு சாம்சன் இதுவரை 290 டி20 போட்டிகளில் 277 இன்னிங்ஸ்களில் விளையாடி 334 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் அவர் இந்த டி20 தொடரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப் பிடிப்பார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 391 போட்டிகளில் விளையாடி 338 சிக்ஸர்களை அடித்து தற்சமயம் நான்காம் இடத்தில் உள்ளார். இதுதவிர்த்து இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்திலும், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
தோனி, தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு
சஞ்சு சாம்சன் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 29.88 சராசரியுடன் 7293 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் தொடரில் அவர் 140 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கை முந்தி ஏழாவது இடத்தைப் பிடிப்பார். மகேந்திர சிங் தோனி டி20 போட்டிகளில் 7432 ரன்களையும், கார்த்திக் 405 போட்டிகளில் 7419 ரன்களையும் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 12,886 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 11,830 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.
Win Big, Make Your Cricket Tales Now