
இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் இத்தொடருககன கேரள கிரிக்கெட் அணியை கேரள கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே போது அளவு ரன்களைச் சேர்க்க முடியாமல் தவித்து வந்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற வங்கதேச டி20 தொடரின் மூலம் இந்திய அணியிம் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அத்தொடரின் கடைசி போட்டியில் அபாரமான சதத்தை விளாசி தனது கம்பேக்கை கொடுத்தார். அதனைத்தொடர்ந்து தெ ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சதமடித்து சாதனை படைத்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.