Advertisement
Advertisement
Advertisement

PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் வீழ்த்தி இஸ்லாமாபாத் அபார வெற்றி!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 25, 2023 • 10:24 AM
Sarfaraz, Hafeez Knocks Goes In Vain As Islamabad United Thrash Quetta Gladiators By 63 Runs In PSL
Sarfaraz, Hafeez Knocks Goes In Vain As Islamabad United Thrash Quetta Gladiators By 63 Runs In PSL (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ 22 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாசினார். கேப்டன் ஷதாப் கான் 14 பந்தில் 12 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் இறங்கிய அசாம் கான் காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். 

Trending


சிக்ஸர் மழை பொழிந்து சதத்தை நெருங்கிய அசாம் கான் 42 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.  ஆசிஃப் அலி 24 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 6 பந்தில் 17 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 220 ரன்களை குவித்தது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி. 

இதையடுத்து, 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 26 பந்தில் 48 ரன்கள் அடித்தார். கேப்டன் சர்ஃபராஸ் அகமது 36 பந்தில் 41 ரன்களும், இஃப்திகார் அகமது 27 பந்தில் 39 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.,

இதனால் 19.1 ஒரு ஓவரிலேயே குயிட்டா அணி 19.1 ஓவரில் 157 ரன்ளை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இஸ்லாமாபத் யுனைடெட் அணி தரப்பில் ஃபஸல்லா ஃபரூக்கி, ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியெட்டர்ஸை வீழ்த்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement