பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோருக்கு பிசிசிஐ-யின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை ஈட்டி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமைகளை நிரூபித்தனர். இதையடுத்து, இந்திய அணியின் இளம் வீரர்களான சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் இம்முடிவானது அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Trending
சமீபத்தில் தான் பிசிசிஐ தங்கள் வீரர்களுக்கான ஒப்பந்தங்களை அறிவித்திருந்தது. அச்சமயத்தில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர்
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்ததால் அவர்களுக்கு ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் பிசிசிஐ விதிப்படி ஒரு வீரர் ஒப்பந்தத்தைப் பெற மூன்று டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாடி இருக்க வேண்டும். இந்நிலையில் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம் பிசிசிஐ ஒப்பந்ததில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் பிசிசிஐ-யின் எச்சரிக்கையையும் மீறி ஐபிஎல் தொடருக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பங்கேற்காமல் இருந்து வந்த நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அகியோரின் மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி காட்டியது. அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை ரஞ்சி அணியில் இணந்து விளையாடியதன் மூலம் மீண்டும் ஒப்பந்தத்தில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் மீண்டும் ஒப்பந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ ஒப்பந்தம் பெற்ற வீரர்கள்
கிரேடு ஏ+: ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேடு ஏ: ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா
கிரேடு பி: சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிரேடு சி: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல்.
வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்கள்: ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வத் கவேரப்பா.
Win Big, Make Your Cricket Tales Now