
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ஃப்ராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு முறையும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஃப்ராஸ் கான் சதமடிக்கும் போதெல்லாம் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக கேஎல் ராகுல் போட்டியிலிருந்து விலக சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைத்தது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சர்ஃப்ராஸ் கான் விளையாடும் லெவனில் இடம்பிடிக்காமல், காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக ஃபீல்டிங் மட்டுமே செய்து வந்தார்.
Video of the day.
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024
Emotions from Sarfaraz Khan, his father & wife during cap presentation - he has made everyone proud. pic.twitter.com/JeXsmeKoof