
உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்கன்ஸி 5 ரன்களிலும், மேத்யூ கிராஸ் 13 ரன்களிலும், பிராண்டன் மெக்முல்லன் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் அதேசமயம் தாமஸ் மெக்கிண்டோஷ் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் பெர்ரிங்டனுடன் ஜோடி சேர்ந்த மைக்கேல் லீஸ்க் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்கள் சேர்த்த மைக்கேல் லீஸ்க் விக்கெட்டை இழந்தார்.