
எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது பிரண்டன் மெக்முல்லன் மற்றும் ரிச்சி பெர்ரிங்டன் ஆகியோரின் அபாரமான சதத்தின் மூலமாக 50 ஓவர்களில் 380 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிச்சி பெர்ரிங்டன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 105 ரன்களையும், பிராண்டன் மெக்முல்லன் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள என 101 ரன்களையும், ஜார்ஜ் முன்சி 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீட் 74 ரன்களையும், மைக்கேல் லெவிட் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 235 ரன்களிலேயே ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரண்டன் மெக்முல்லன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.