
எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மே 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் நெதரலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடியா ஸ்காட்லாந்து அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக இப்போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இருவரும் நடுவரின் முடிவை ஏற்க மறுத்ததன் காரணமாக இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீத தொகையும், ஒரு கரும்புள்ளியையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது குறிப்பிடத்தக்காது.