
SF vs SEA, Match 22 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் முதல் இடத்தில் உள்ளதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் சியாட்டில் ஆர்காஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே சியாட்டில் ஆர்காஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SF vs SEA: Match Details
- மோதும் அணிகள்- சீயாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
- இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
- நேரம் - ஜூலை 01, காலை 4.30 மணி (இந்திய நேரப்படி)