இந்திய அணியின் கோரிக்கையை மறுத்த பிசிசிஐ?
இந்திய டெஸ்ட் அணியின் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விடுத்த கோரிக்கையை, தேர்வாளர்கள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்து சென்றுவிட்டது. இதனிடையே, நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மோதியது. இதில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதனையடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
Trending
ஆனால் எதிர்பாராதவிதமாக சுப்மன் கில்லுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் 6 முதல் 8 வாரங்களுக்கு விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மாற்று வீரராக பிரித்வி ஷா அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இருக்கும் பிருத்வி ஷாவையும், தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரையும் இங்கிலாந்து அனுப்புமாறு தேர்வாளர்களுக்கு இந்திய அணியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஏற்கெனவே இங்கிலாந்து சென்று இருக்கும் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கே.எல்.ராகுல், மயாங்க் ஆகியோர் இருப்பதால் இந்திய அணியின் இக்கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now