
இந்திய அணி தற்போது இங்கிலாந்துடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த தொடர் வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு இந்திய அணியை வழிநடத்தப்போகும் 8ஆவது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். இப்படி மாதத்திற்கு ஒரு கேப்டன் என மாற்றினால் இந்திய அணியின் எதிர்காலம் என்ன ஆகும், வீரர்களின் புரிதல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிசிசிஐ இதற்கு நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் எனக்கோரிக்கை வலுத்து வருகிறது.