பும்ராவால் ஷாஹினுக்கு நிகராக வர முடியது - அப்துல் ரசாக்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைவிட, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடியே சிறந்தவர் என முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இருவரும் மூன்று வித போட்டிகளிலும் பந்துவீச்சின் மூலம் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அதேநேரத்தில், இருவரும் சமீபகாலமாக அவ்வப்போது காயம் ஏற்பட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
காயம் காரணமாக, இருவருமே கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா செப்டம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. சாஹின் அஃப்ரிடி 3 மாத காலத்திற்குப் பின் டிசம்பர் மாதத்தில் இருந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், பும்ராவைவிட, சாஹின் அப்ரிடி சிறந்தவர் என முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “ஷாஹின் அஃப்ரிடி பல வகைகளில் பும்ராவைவிட மிகச்சிறந்த பந்துவீச்சாளர். எந்த வகையிலும் ஷாஹினுக்கு நிகராக பும்ரா வர முடியாது” எனத் தெரிவித்துள்ளார். பும்ராவைப் பற்றி ரசாக், இப்படி கூறுவது முதல் முறையல்ல.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டு, ” நான் எனது காலகட்டத்தில் கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு இருக்கிறேன். அவர்களை ஒப்பிடும்போது பும்ரா எனக்கு ஒரு குழந்தை பந்துவீச்சாளர். எந்த வகையிலும் என்னை அவர் அச்சுறுத்த முடியாது. அவரது பந்துவீச்சை எளிதாக என்னால் அடிக்க முடியும்” எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
அதனால், ரசாக்கின் இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது காயம் காரணமாக விலகிய பும்ரா, தற்போது வரை ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now