Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!

எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார்.  

Advertisement
Shai Hope gutted after Super-Over loss to Netherlands in WC 2023 Qualifiers!
Shai Hope gutted after Super-Over loss to Netherlands in WC 2023 Qualifiers! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 27, 2023 • 01:16 PM

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் சதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்களை குவித்தது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
June 27, 2023 • 01:16 PM

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தேஜா நிடமனுரு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததுடன் 111 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் லோகன் வான் பீக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் நெதர்லாந்து அணியும் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. 

Trending

இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் லோகன் வான் பீக் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ஓவரில் அடுத்தது பவுண்டரிகளாக விளாசி 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 30 ரன்கள் அடித்தார். அதன்பின் அவரே நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் பந்துவீச, அதனை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  

இதன்மூலம் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபர வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லோகன் வான் பீன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.  

இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி, “சில சமயம் நீங்கள் மேலே ஏறுவதற்கு நீங்கள் அடிமட்டத்தை அடைந்துதான் ஆகவேண்டும். எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். இது நமது கிரிக்கெட் எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பாகும்” என்று கூறியுள்ளார்.

இந்தத் தோல்விக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், “நாங்களே எங்களை வீழ்த்திக் கொண்டோம். 374 ரன்கள் எடுத்து தோற்றதை என்னால் நம்ப முடியவில்லை. நேர்மையாக அந்த ரன் போதும் என்று நினைத்தேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்று நம்பினேன். துரதிஷ்டவசமாக நாங்கள் தோற்றோம். என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக நம் கண் முன்னால் இருக்கிறது. இனி சிறப்பாகச் செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement