Advertisement

விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!

விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 20, 2024 • 08:28 AM

இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 20, 2024 • 08:28 AM

அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பி தொடருக்கான இந்திய அணிக்கு முகமது ஷமி அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Trending

ஆனால் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தடையில்லா சான்றிதழை பெறும் அளவில் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ளதால் இனி அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்பதும்  உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இத்தொடரில் குரூப் இ பிரிவில் இடம்பிடித்துள்ள பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான பெங்கால் அணியில் இருந்து முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்படுவதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் ஷமி விளையாடிய நிலையில், பணிச்சுமை காரணமாக அவருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன், இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாமல் முகமது ஷமி அவதிப்பட்டு வந்தார். பின் காயத்திலிருந்து மீண்ட அவர், இந்தாண்டு நடைபெற்ற அரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் பெங்கால் அணிக்காக விளையாடி தனது உடற்தகுதி குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணி: சுதீப் குமார் கராமி (கேப்டன்), முகமது ஷமி, அனுஸ்துப் மஜும்தார், அபிஷேக் போரல், சுதீப் சட்டர்ஜி, கரண் லால், ஷகிர் ஹபீப் காந்தி, சுமந்த குப்தா, சுபம் சட்டர்ஜி, ரஞ்சோத் சிங் கைரா, பிரதீப்தா பிரமானிக், கௌசிக் மைதி, விகாஸ் சிங், முகேஷ் குமார், சக்சம் சவுத்ரி, ரோஹித் குமார், முகமது கைஃப், சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், சயன் கோஷ், கனிஷ்க் சேத்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement