
Shams Mulani Replaces Mayank Markande In Rest Of India Squad For Irani Cup (Image Source: Google)
கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் மார்ச் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
சர்ஃபராஸ் கானுக்கு விரலில் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற கூடுதல் தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பயிற்சியின்போது விரலில் காயம் ஏற்பட்டதால் இரானி கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார்.