
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் அவர் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 21 போட்டிகளில் விளையாடியுள்ள டைட் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தனது அதிவேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன ஷான் டைட், தனது ஓய்வுக்கு பிறகு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இவர், கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது ஆல் டைம் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் நான்காம் இடத்திலும் இந்திய ஜம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார்.