Advertisement
Advertisement
Advertisement

தோனி, கோலியின் தலைமையில் விளையாடுயது குறித்து மனம் திறந்த் ஷிகர் தவான்!

தோனி மிகவும் அமைதியானவர், விராட் கோலி ஆக்ரோஷமானவர் என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan February 17, 2023 • 10:28 AM
Shikhar Dhawan opens up on his camaraderie with Virat Kohli!
Shikhar Dhawan opens up on his camaraderie with Virat Kohli! (Image Source: Google)
Advertisement

டெல்லியைச் சேர்ந்த இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி அதிவேக சதம் அடித்து இந்திய அளவில் சாதனை படைத்தார். 

டெல்லி மாநில அணிக்காக விளையாடிய பொழுது இவரும் விராட் கோலியும் நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தவர்கள். இருவருமே இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைமையில் அறிமுகமானவர்கள். பின்பு விராட் கோலி தலைமையிலும் ஷிகர் தவான் விளையாடினார்.

Trending


முதலில் இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, பின்பு டி20 கிரிக்கெட்டிலும் வாய்ப்பை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் அணிக்கு வெளியே இருக்கிறார்.

தற்பொழுது மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இருவர் தலைமையில் விளையாடியது குறித்து பேசி உள்ள அவர், “இருவருமே வித்தியாசமான கேரக்டர்கள். தோனி மிகவும் அமைதியானவர். அவர் எப்பொழுதும் தனது வீரர்களை ஆதரிப்பவர். தோனி அழுத்தம் மிகுந்த நெருக்கடியான நேரங்களில் கூட மிகவும் அமைதியாக இருந்து புத்திசாலித்தனமாக செயல்படுவார். 

அவர் ஸ்டெம்ப்களுக்கு பின்னால் இருந்து மட்டுமே விளையாட்டை படிக்க கூடியவர் கிடையாது. எந்த பீல்டிங் பொசிஷனில் இருந்தாலும் ஆட்டம் நகரும் சூழ்நிலையை புரிந்து அதற்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கும் திறமை வாய்ந்தவர். விராட் பற்றி பேசினால் அவருடைய குணம் மகேந்திர சிங் தோனிக்கு அப்படியே நேர்மாறானது. அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக்கூடியவர். அவருக்கு ஆக்ரோஷமாக செயல்படுவது பிடிக்கும். அதனால் அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். அவர் அந்த கேரக்டருக்கான கேப்டனாக இருந்தார்.

அவருக்கு கீழ் விளையாடியதில் ஈகோவா? ஈகோ இருந்தால் காயப்பட வேண்டி வரும். எனக்கு அப்படியான கீழ்மையான குணங்கள் கிடையாது. நான் அவரை விட சீனியர் அவருக்கு கீழ் நான் விளையாடுவது என்று நினைத்தால்தான் ஈகோ வரும். ஆனால் நான் அப்படி நினைப்பவன் கிடையாது. நாங்கள் டெல்லி அணிக்காக விளையாடும் போது இருந்தே நல்ல நட்பை கொண்டு இருந்தோம். 

மேலும் எங்களுக்குள் அழகான கேலிகள் எப்பொழுதும் இருந்தது. மேலும் அவர் இந்திய அணியில் எனக்கு சீனியர். என்னால் அவருடன் விளையாட முடியும் ஆனால் இளம் வீரர்களால்தான் அது முடியாது. எங்களுக்குள் எப்போதும் நட்பும் தொடர்பும் நல்ல முறையில் இருந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement