
இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தொடர் முழுக்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய விதம் இந்திய ரசிகர்களை காயப்படுத்தியதோடு குழப்பத்திலும் வைத்திருக்கிறது.
இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்ததா இல்லையா என்பது குறித்து ரசிகர்களுக்கு பெரிய கேள்வி இருக்கிறது. ரோகித் சர்மா பேட்டிங் செய்யும்பொழுது எளிமையாக தெரிந்தது, அவர் ஆட்டம் இழந்ததும் அப்படியே மாறிவிட்டது. மேலும் ஆஸ்திரேலியா திரும்ப வந்து பேட்டிங் செய்யும்பொழுது பேட்டிங் செய்வது எளிமையாக இருந்தது.
இந்தியாவிற்கு இறுதி போட்டியில் கிடைத்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சரியான ஆடுகளம் கிடையாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில் தான் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் விளையாடிய விதம் மிகவும் பொறுமையாக அமைந்தது. இது தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.