
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கான டெஸ்ட் தொடர் வருகின்ற ஒன்பதாம் தேதி முதல் நாக்பூரில் நடைபெற இருக்கிறது . சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு இந்தத் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம் .
ஆனாலும் கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து இருக்கிறது . இதனால் கட்டாயம் இந்த தொடரை வென்றே ஆக வேண்டிய முனைப்பில் இருக்கிறது ஆஸ்திரேலியா . மேலும் அந்த அணி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் சென்று டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்தியாவிற்கு வந்திருக்கிறது .
இரண்டு அணிகளுமே தொடரின் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்தத் தொடர் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் தங்களது கணிப்புகளை கூறி வருகின்றனர் . டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .