
இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 86 ரன்கல் விளாசி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரராகவும் ஸ்ரேயாஸ் திகழ்கிறார். இதனால் இந்திய அணியின் மிக முக்கிய வீரராகவும் மாறியுள்ளார்.
இந்த நிலையில் தனது அறிமுக டெஸ்ட் போட்டி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் திடீரென டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது, வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
ஏனென்றால் ஏராளமான சீனியர் வீரர்கள் அணியில் இருந்தனர். இருந்தாலும் என்னை தயார்படுத்தி கொண்டேன். சரியாக டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, நானும் சுப்மன் கில்லும் பேசி கொண்டிருந்தோம். அப்போது கில் என்னிடம், ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சதம் விளாசிவிடு. சதம் விளாசினால், வெவ்வேறு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.