
Shreyas Iyer to have back surgery, out of IPL 2023 and WTC final (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த வரிசையில் முக்கிய வீரர் கேகேஆர் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் .இதனால் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக் நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் லண்டனில் ஜூன் மாதம் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.