
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 3ஆவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பையை போல இந்த கோப்பையையும் எங்களை தாண்டி உங்களால் எளிதாக வெல்ல முடியாது என்பதை காண்பித்துள்ளது.
குறிப்பாக ருதுராஜ் கைக்வாட் 123 ரன்களை அடித்த உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 223 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 104* ரன்கள் குவித்து வெற்றியை பறித்தார். அதனால் 2 – 1 என்ற கணக்கில் இருக்கும் இத்தொடரின் முக்கியமான 4ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது.
இதில் கடந்த போட்டியில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த பவுலிங் துறையில் சிறப்பாக விளையாடி வெற்றி காண இந்தியா தயாராகியுள்ளது. இந்த சூழ்நிலையில் 4 மற்றும் 5ஆவது போட்டிகளுக்கான இந்திய அணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார்.