Advertisement

மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!

வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 27, 2023 • 15:05 PM
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்;  குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்! (Image Source: Google)
Advertisement

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

அந்த வகையில் நேற்று 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.

Trending


கடந்த 2018-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய ஷுப்மன் கில் 2022ஆம் ஆண்டு அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பின்னர் குஜராத் அணிக்காக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு சீசன்களாக விளையாடி வந்தார். இதுவரை குஜராத் அணிக்காக 16 போட்டியில் விளையாடியுள்ள அவர் 483 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் இறுதி போட்டி வரை சென்று அசத்தியது. அந்த இரண்டு தொடர்களிலும் ஷுப்மன் கில் தனது அட்டகாசமான பங்களிப்பை குஜராத் அணிக்கு வழங்கி இருந்தார். எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவர் தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஷுப்மன் கில் இதுகுறித்து பேசுகையில், “குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்களுடைய அணி நிர்வாகம் என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த தொடரில் நான் குஜராத் அணியை வழிநடத்த ஆவலோடு காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement