
Shubman Gill Records: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஷுப்மன் கில் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்தவகையில் இப்போட்டியில் ஷுப்மன் கில் ஒரு ரன் எடுக்கும் பட்சத்தில் சேனா நாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவர். தற்சமயம் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ் மற்றும் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் தலா 722 ரன்களுடன் சேனா நாடுகளில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.