
எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களை ஒருங்கிணைத்து ஆலூரில் ஒரு பயிற்சி முகாமினை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் யோயோ டெஸ்ட் நடத்தப்பட்டு முடிந்துள்ளது.
அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வில் விராட் கோலி 17.2 புள்ளிகள் பெற்றதாக அவரே சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவர் அதிக யோ யோ மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த யோ யோ டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் யோ யோ டெஸ்டில் பங்கேற்றார்கள் என்றும் கூறப்படுகிறது. 16.5 புள்ளிகள் வரை அடிப்படை தகுதி புள்ளிகளாக வைத்து நடத்தப்படும் இந்த யோ டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியின் வீரர்களால் அணியில் இடம் பிடிக்க முடியும்.