
ஐசிசி டி20 தரவரிசை போட்டிக்கான பட்டியலில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. கடைசியாக நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் பலர் டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றங்களை அடைந்திருக்கிறார்கள்.
இதில் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து 906 புள்ளிகள் உடன் பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணியின் ஷுப்மன் கில் தரவரிசை பட்டியலில் உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
முதல் இரண்டு டி20 போட்டியில் சொத்தப்பிய கில், கடைசி ஆட்டத்தில் 63 பந்துகளில் 126 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அவர், அவர் தரவரிசை பட்டியலில் 168 இடங்கள் முன்னேறி தற்போது 30ஆவது இடத்தில் இருக்கிறார். கில் 6 சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.