-mdl.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் ஷுப்மன் கில்லை பாராட்டி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார். ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.
இதனால் தற்போது இந்திய டி20 அணியின் இடம் கிடைக்காத சூழல் தற்போது கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. கில் இடத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் அபாரமாக ரன் சேர்த்து தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டார். இதனால் கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினமாகிவிட்டது. கில் கடைசியாக பெரிய ஸ்கோர் அடித்து நீண்ட நாட்களாக ஆகிவிட்டது.
இந்த நிலையில் ஷுப்மன் கில் குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட், “கில் இடம் உள்ள திறமைக்கு அவர் அநியாயம் செய்து வருவதாக கூறியுள்ளார். கில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். 20 ரன்கள் அடித்து விட்டு அதன் பிறகு ஒரு தேவையில்லாத ஷாட் அடி ஆட்டமிழந்து விடுகிறார்.